ஒரு தடவ மட்டும்தான்.. தாலிய கழட்டி வச்சுட்டு அத பண்ண முடியாது - நடிகை அம்மு ஓபன் டாக்!
திருமணம் செய்து கொள்வது குறித்து நடிகை அம்மு ராமச்சந்திரன் பேசியுள்ளார்.
அம்மு ராமச்சந்திரன்
பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக இருந்து பின்னர் சினிமாவிலும் நடித்து பிரபலமானவர் நடிகை அம்மு ராமச்சந்திரன். மேலும், பைரவி என்ற சீரியலில் நடித்து இல்லத்தரசிகள் மத்தியிலும் பிரபலமானார்.
அதேபோல் மரிய தாய், மந்திரப்புன்னகை, ஒரு முதல் ஒரு காதல், சூறையாடல், சும்மாவே ஆடுவோம் போன்ற திரைப்படங்களில் நடித்து தனது அபார நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
அம்மு ராமச்சந்திரன் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில், திருமணம் குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, “இரு மனம் இணைந்து நடக்கக்கூடிய திருமணத்தை நமது முன்னோர்கள் ஆயிரம் காலத்துப் பயிர் என்று குறிப்பிட்டு இருப்பார்கள். இதில் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளது என்பது உங்களுக்கும் தெரியும்.
பேட்டி
இன்றைய அவசர காலகட்டத்தில் பெற்றோர்களால் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணங்களும், அவர்களாகவே முடிவு செய்து கொள்ளும் காதல் திருமணங்களும் நிலைத்து நிற்காமல் விவாகரத்தை விரைவில் பெற்று தனித்தனியாக வாழக்கூடிய சூழ்நிலைகள் அதிக அளவு உருவாகியுள்ளது.
கலாச்சாரத்தை பேணிப் பாதுகாத்து வரும் நம் நாட்டிலும் விவாகரத்துக்கள் அதிகளவு ஏற்படுகிறது. திருமணம் என்பது என் வாழ்க்கையில் ஒரு முறை தான் நடக்க வேண்டும்.
அதுவும் கட்டாயத்தின் பேரில் ஒருவனை திருமணம் செய்து கொண்டு 3 மாதத்தில் தாலியை கழட்டி வைத்துவிட்டு இன்னொருவனுடன் திருமணம் செய்து கொண்டு வாழ்வது என்னால் முடியாது” என்று பேசியுள்ளார்.