வாழ்வில் வந்ததற்கு நன்றி..காதலை உறுதிபடுத்திய நடிகை அம்மு அபிராமி! காதலன் இவரா?
நடிகை அம்மு அபிராமி தன்னுடைய காதலை உறுதிப்படுத்தியுள்ளார்.
அம்மு அபிராமி
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை அம்மு அபிராமி. ’ராட்சசன்’ படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. பின்பு, வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அசுரன்’ படத்தில் இவரது கதாபாத்திரம் மூலம் பிரபலமானார்.
இதன் பிறகு சினிமாவில் அடுத்தடுத்து படங்கள் நடித்து வந்தாலும் ‘குக் வித் கோமாளி’ சமையல் ரியாலிட்டி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராகக் கலந்து கொண்டார்.அந்த நிகழ்ச்சியின் இயக்குநர் பார்த்திவ் மணியுடன் அம்மு அபிராமிக்கு காதல் மலர்ந்திருக்கிறது.
காதலன் இவரா?
முன்னதாக இவர்கள் காதலிப்பதாக பல செய்திகள் வளம் வந்ததது. ஆனால் தற்போது அதனை உறுதிப்படுத்தும் வகையில் பார்த்திவ் மணியுடன் எடுத்தப் புகைப்படங்களைத் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்தத் பதிவில், பிறந்தநாள் வாழ்த்துகள் மணி. பிறந்ததற்கு நன்றி, வாழ்வில் வந்ததற்கு நன்றி!’ என குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ‘நீங்கள் காதலை உறுதி செய்ததற்கு நன்றி’ என கமன்ட் செய்து இந்த ஜோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.