இதையெல்லாம் செய்ய சொல்லாதீங்க ; ஆல்யா போட்ட போஸ்ட் - வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!

Sun TV Alya Manasa Sanjeev Karthick Social Media
By Swetha May 08, 2024 10:14 AM GMT
Report

குழந்தைகளுடனும் ஆல்யா பதிவிட்டிருக்கும் வீடியோ ஒன்று நெட்டிசன்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆல்யா போஸ்ட் 

விஜய் டிவியின் ஹிட் சீரியலான 'ராஜா ராணி' மூலம் பிரபலமானவர் நடிகை ஆல்யா மானசா. அதே சீரியலில் அவருடன் pair ஆக நடித்த சஞ்சீவை காதலித்து கரம் பிடித்தார். இப்போது இவருக்கு அய்லா என்ற மகளும் அர்ஷ் என்ற மகனும் உள்ளனர்.

இதையெல்லாம் செய்ய சொல்லாதீங்க ; ஆல்யா போட்ட போஸ்ட் - வறுத்தெடுக்கும் ரசிகர்கள்! | Actress Alya Mansa Rosted By Netizens

இரண்டு குழந்தைகள் இருந்தும் தொடர்ந்து தனது கரியரிக்கு அதிகம் முக்கிய துவம் கொடுத்து வருகிறார். தற்போது அவர் சன் டிவியில் 'இனியா' என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்த நிலையில், ஆல்யா நேற்று தனது இரு குழந்தைகளுடன் வெளியில் சென்றுள்ளார்.

கணவரை விவாகரத்து செய்யும் ஆலியா மானசா? பழிவாங்கனும் - கொந்தளித்த நடிகை!

கணவரை விவாகரத்து செய்யும் ஆலியா மானசா? பழிவாங்கனும் - கொந்தளித்த நடிகை!

ரசிகர்கள்

அப்போது குழந்தைகளை கைப்பிடித்து அழைத்து செல்வதற்கு பதிலாக அவர்களை அங்கும் இங்கும் நகர விடாமல் இருப்பதற்காக தனது கழுத்தில் துப்பட்டாவை போட்டுக்கொண்டு அதன் இரு முனைகளிலும் குழந்தைகளின் கையை இறுக கட்டியிருக்கிறார் ஆல்யா. இத்தனையோ விடியோவாக எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையெல்லாம் செய்ய சொல்லாதீங்க ; ஆல்யா போட்ட போஸ்ட் - வறுத்தெடுக்கும் ரசிகர்கள்! | Actress Alya Mansa Rosted By Netizens

மேலும், ’உங்கள் குழந்தைகளையும் சமாளிக்க இதுபோன்று செய்யுங்கள்’ எனவும் கூறியிருக்கிறார்.இந்த வீடியோ தான் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் பலர், 'குழந்தைகள் சேட்டை செய்கிறார்கள் என்றால் அவர்களது கையை பிடித்து அழைத்துச் செல்லலாம்.

அதற்கு பதிலாக இப்படி கையை கட்டியிருப்பது ஆபத்தானது. ஏனெனில், திடீரென குழந்தைகள் குறுக்கே அங்கும் இங்கும் ஓடினால் அந்த துப்பட்டா கழுத்தை இறுக்கவும் அதிக வாய்ப்புள்ளது. அப்படி ஆச்சுன்னா என்ன ஆகறது? இதை மற்றவர்களையும் செய்யச் சொல்லி சொல்லாதீர்கள்' என ஆல்யாவை திட்டி தீர்த்து வருகின்றனர்.