பிரபல தமிழ் நடிகருடன் கரம் கோர்க்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - குவியும் வாழ்த்துக்கள்!
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சித்தார்த் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
தமிழில் 3 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அதில் தனுஷ், ஸ்ருதிஹாசன் லீட் ரோலில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் மக்களிடையே போதிய வரவேற்பை பெறாவிட்டாலும் இளைஞர்களை கவர்ந்தது.

இந்நிலையில் அதன்பின், சினிமாவில் இருந்து சில காலம் விலகியிருந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் என்ற படத்தை இயக்கினார். அப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.
சமூக பிரச்சனை
மேலும், அதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இதன்பின், தற்போது மீண்டும் ஒரு சமூக பிரச்சனையை மையமாக கொண்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கதை எழுதியுள்ளதாகவும், அந்த கதையை நடிகர் சித்தார்த்திடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan
அத்துமீறும் இந்திய கடற்றொழிலாளர்கள் நியாயம் கோருவது நியாயமற்றது! முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு IBC Tamil