ஐஸ் வர்றீயா-ன்னு கூப்பிட்டாங்க - நடிகை ஐஸ்வர்யா பரபரப்பு பேட்டி..!
பிரபல நடிகையான ஐஸ்வர்யா திரைப்பட சூட்டிங்கில் ஒருவர் தன்னை அழைத்ததாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
யார் இந்த ஐஸ்வர்யா?
சாந்தா மீனா என்ற இயற்பெயர் கொண்ட ஐஸ்வர்யா 1971 ஆம் ஆண்டு பிரபல நடிகை லஷ்மியின் மகளாக பிறந்தார்.
1991 ஆம் ஆண்டு வெளியான ஒளியம்புகள் என்ற மலையாள திரைப்படத்தில் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
திரைப்படங்கள்
தமிழில் நியாயங்கள் ஜெயிக்கட்டும்,தையல்காரன்,மரிக்கொழுந்து,மில் தொழிலாளி,நான் புடிச்ச மாப்பிள்ளை, ஊரெல்லாம் உன் பாட்டு, பொண்ணுக்கு சேதி வந்தாச்சு,
அன்புள்ள தங்கச்சிக்கு,ராசு குட்டி, மீரா, பொறந்தாலும் ஆம்பளையா பொறக்க கூடாது, தங்க பாப்பா, உள்ளே வெளியே, எஜமான், மக்கள் ஆட்சி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சூர்யா நடிப்பில் வெளியான ஆறு படத்தில் சவுண்ட் சரோஜா என்ற முக்கிய காதப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
திருமணம்
இவர் தன்வீர் அஹமத் என்பவரை கடந்த 1994 -ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1995-ம் ஆண்டு ஒரு மகள் பிறந்த நிலையில் கணவர் தன்வீர் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் 1996 ஆம் விவகாரத்து பெற்று பிரிந்தனர்.
வர்றீயா-ன்னு கூப்பிட்டாங்க
இந்நிலையில் பேட்டி ஒன்றில் நடிகை ஐஸ்வர்யா, ராமராஜன் நடிப்பில் 1991ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் ஊரெல்லாம் உன் பாட்டு என்ற திரைப்படத்தில் நடிப்பதற்காக சென்றேன்.
படப்பிடிப்பு தளத்தில் நான் குடும்ப பெண் வேடத்தில் பாவடை தவானி அணிந்து கொண்டு சென்றேன். தனக்கு முன்னாள் நடிகர் ராமராஜன் சார் சென்று கொண்டு இருந்தார்.
கூட்டம் அதிகமாக இருந்தது. நான் பின்னால் தலை குனிந்து கொண்டு அமைதியாக சென்றேன் அப்போது நடிகர் ராமராஜன் சென்ற பிறகு சத்தம் அடங்கிவிட்டது.
அடங்கி சத்தத்தில் ஒரே ஒரு குரல் மட்டும் கேட்டது.அதில் ஐஸ் வர்றீயா என்று கூப்பிட்டார்கள் என்றார்.
ஒரு மனைவி நல்ல உடை அணிந்து குடியிருப்பு பகுதியில் நடந்து சென்றால் ,மினிக்கிட்டு போறா பாரு என்று தான் பேசுவார்கள் என்று வேதனை தெரிவித்தார்.
1 ரூபாய் செலவில்லாமல் திருமணம் - ரூ.25 கோடி வருமானம் பார்த்த நயன்தாரா