வெற்றிமாறன் என்ன கெட்ட வார்த்தைல திட்ட சொன்னார் - உண்மை உடைக்கும் பிரபல நடிகை!

Aishwarya Rajesh Vetrimaaran
By Vinothini May 23, 2023 10:28 AM GMT
Report

இயக்குனர் வெற்றிமாறன் குறித்து பிரபல நடிகை ஒரு பேட்டியில் வெளிப்படையாக பேசியுள்ளார்.

இயக்குனர்

பிரபல இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக இருந்தவர் வெற்றிமாறன்.

இவர் தமிழில் பொல்லாதவன் படம் மூலம் அறிமுகமானார், இவரின் இந்த முதல் படமே வெற்றி படமாக அமைந்தது. மேலும், இவர் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

actress-aishwarya-rajesh-shares-about-vetrimaran

நடிகர் தனுஷை வைத்து இவர் இயக்கிய ஆடுகளம் படம், 5 தேசிய விருதுகளை அள்ளி தந்தது.

இதன்மூலம் இவர் இந்திய முழுவதும் பிரபலமான இயக்குனராக மாறினார். அடுத்தது இவரது வடசென்னை படம் அனைவராலும் அதிகமாக பேசப்பட்டு, பாராட்டு தெரிவித்தும் வந்தது.

நடிகை பேட்டி

இந்நிலையில், பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இந்த படம் குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

actress-aishwarya-rajesh-shares-about-vetrimaran

அதில் அவர், "நான் வடசென்னை படத்தின் ஆடிஷனில் கலந்துகொண்டேன். அப்போது இயக்குனர் வெற்றிமாறன், ஐஸ்வர்யா உங்களுக்கு என்னவெல்லாம் கெட்ட வார்த்தை தெரியுமா அதை அப்படியே பேசுங்க அப்டினு சொன்னாங்க" என்றும்.

அதிர்ச்சியடைந்த இவர் என்ன சார் இது இப்படியெல்லாம் சொல்றீங்க என்று கேட்டுள்ளார். அதற்கு வெற்றிமாறன், நீ பேசுமா என்று கூறியுள்ளார், இவரும் தைரியத்தை வரவழைத்து கொண்டு பேசியுள்ளார்.

அதனை கேட்டுவிட்டு சிறுது நேரம் கழித்து, 'என்னம்மா பத்மா எப்போமா ஷூட்டிங் போவோம்' என்று கேட்டுள்ளார். உடனே ஐஸ்வர்யா என்ன சார் சொல்றீங்க என கேட்டதும் , ஆமாம் நீதான் இந்தப் படத்துக்கு ஹீரோயின் என்று கூறியுள்ளார்.

இயக்குனர் குறித்து நடிகை அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.