சோத்துக்கு வழி இல்லாமல் இல்லை - கொந்தளித்த நடிகை ஐஸ்வர்யா
சோத்துக்கு வழி இல்லாமல் இருக்கிறேன் என்று சொல்லவே இல்லை என நடிகை ஐஸ்வர்யா பதிலடி கொடுத்துள்ளார்.
ஐஸ்வர்யா
முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை லட்சுமியின் மகள் தான் ஐஸ்வர்யா. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நெடுந்தொடர்களிலும் நடித்துள்ளார்.
தற்போது சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில்,சமையல், அழகு டிப்ஸ், சோப்பு தயாரிப்பு போன்றவற்றை வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அதில், சோத்துக்கு வழி இல்லை, கஷ்டப்படுகிறேன் என்று சொன்னது உண்மையா? என ஒரு ரசிகர் கேள்வி கேட்க,
பதிலடி
நான் அந்த யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், சோத்துக்கு வழி இல்லை என்று நான் சொல்லவே இல்ல இப்படி எல்லாம் தலைப்பு போட்டால் தான் மக்கள் அதை படிப்பார்கள், மக்கள் படிக்க படிக்க வியூவர்ஸ் அதிகரிக்கும் அப்போத்தான் அவங்களுக்கு காசு வரும்.
நான் யோகா பயிற்சியினால் இப்படி சாப்பிடுகிறேன் என்று சொன்னேன், ஆனால்,அவர்கள் காசு இல்லாமல் கஷ்டப்படுகிறேன் என்று சொல்லிவிட்டார்கள். அந்த மாதிரி நான் கஷ்டப்பட்டு இருந்தால் ரோட்டுலத்தான் இருந்து இருப்பேன். என் வாழ்க்கைக்கு தேவையானதை சம்பாதித்துக்கொள்ள எனக்கும் தெரியும் என பதிலளித்துள்ளார்.