விவாகரத்துக்குப் பின் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன் - மனம் திறந்த பிரபல நடிகை
விவாகரத்தான பிறகு ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக நடிகை ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்.
நடிகை ஐஸ்வர்யா
முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை லட்சுமியின் மகள் தான் ஐஸ்வர்யா. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நெடுந்தொடர்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் மனம் திறந்துள்ளார்.
அதில், 1994ம் ஆண்டு தன்வீர் என்பவரை திருமணம் செய்து கொண்டேன், சில கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து விட்டேன். பல வருடங்களுக்கு பின் தன்வீர் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இப்போது அவருக்கு க்யூட்டாக இரண்டு பசங்க இருக்காங்க என்றார்.
ஆதங்கம்
அவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அதே போல, நான் விவாகரத்து செய்த பின் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன் ஆனால் அதுவும் பாதியில் முடிந்து விட்டது. இதற்கு காரணம் என்னவென்றால், லவ் பண்ண ஆரம்பிக்கும் போது எது எல்லாம் பிடித்ததோ,அதை எல்லாம் முதலில் மாற்ற சொல்லுவார்கள்.
என்னைக்கு ஐ லவ் யூனு நாம சொல்லுகிறோமோ அன்னைக்கு முடிஞ்சது கதை. இந்த டிரஸ் போடாத, அவன் கூட பேசாத, அங்கே போகாதனு ஆர்டர் போடுவாங்க. தாய்க்கு பின் தாரம் என்று சொன்னவனை உதைச்சா சரியாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.