என்ன மன்னிச்சிடு அம்மா.. தெரியாம அந்த தப்ப பண்ணிட்டேன் - நடிகை ஐஸ்வர்யா வேதனை!

Jiyath
in பிரபலங்கள்Report this article
தனது தாயார் லட்சுமி குறித்து நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன் பேசியுள்ளார்
ஐஸ்வர்யா பாஸ்கரன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஐஸ்வர்யா பாஸ்கரன். இவர் நடிகை லட்சுமியின் மகள் ஆவர். தற்போது வில்லியாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா, தனது தாயார் லட்சுமி குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது "சில வருடங்களுக்கு முன்பு தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றில் நான் என்னுடைய அம்மாவை குறித்து தவறாக பேசிவிட்டேன். அது அம்மாவின் மனதை எவ்வளவு கஷ்டப்படுத்தியது என்று எனக்கு அதற்குப் பிறகுதான் தெரிந்தது.
வேதனை
அந்த ஒரு தவறை நான் செய்யாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அன்று நான் என் அம்மாவிடம் என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறினேன். நான் செய்த தவறால் எங்க குடும்பத்தினர் எல்லோருமே ரொம்பவும் கஷ்டப்பட்டாங்க.
அதற்குப் பிறகு நான் எந்த இடத்திலும் என்னுடைய குடும்பத்தை தவறாக பேச மாட்டேன். அப்படி பேசவும் கூடாது. நான் மட்டுமல்ல யாருமே நம்முடைய குடும்பத்தை பொதுவெளியில் தவறாக பேசுவது பெரிய தவறு. அது நாம் படுத்துக் கொண்டு எச்சில் துப்புவது போல் தான்" என்று வேதனை தெரிவித்துள்ளார்.