நடிகர் பிரபுவின் சின்ன வீடா கூட போக ரெடி - பிரபல நடிகை ஷாக் ஸ்டேட்மெண்ட்!
நடிகர் பிரபு குறித்து நடிகை ஐஸ்வர்யா பகிர்ந்துள்ள தகவல் வைரலாகி வருகிறது.
நடிகர் பிரபு
பிரபல நடிகை லஷ்மியின் மகள் ஐஸ்வர்யா. 1991 ஆம் ஆண்டு வெளியான ஒளியம்புகள் என்ற மலையாள திரைப்படத்தில் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

தமிழில் நியாயங்கள் ஜெயிக்கட்டும், தையல்காரன், மரிக்கொழுந்து, மில் தொழிலாளி, நான் புடிச்ச மாப்பிள்ளை, ஊரெல்லாம் உன் பாட்டு, பொண்ணுக்கு சேதி வந்தாச்சு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
ஐஸ்வர்யா காதல்
இவர் தன்வீர் அஹமத் என்பவரை கடந்த 1994ல் திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு 1 மகள் உள்ள நிலையில், இருவரும் 1996ல் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். இந்நிலையில் ஐஸ்வர்யா அளித்த பேட்டி ஒன்றில், "எனக்கு 16 வயது இருக்கும் போதே நடிகர் பிரபுவை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் அவ்வளவு அழகாக இருப்பார்.

அவருடைய சிரிப்பை பார்த்தாலே மயங்கி விடுவேன். அப்போது இருந்தே எனக்கு அவர் மீது காதல் இருந்தது. இன்னும் அந்த காதல் ஓயவில்லை. நான் பிரபு மீது வைத்துள்ள காதல் பற்றி அவருடைய மனைவி புனிதாவிற்கும் தெரியும். நான் அவருடைய வீட்டின் அருகேயே வந்துவிட்டேன்.
நீ பெரிய வீடா வெச்சிக்கோ, சின்ன வீடா வெச்சிக்கோ என கிண்டல் செய்தேன்.” என வெளிப்படையாக பேசியுள்ளார். இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
 
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    