24 வயசுதான்.. பரிதாபமாக பலியான இளம் நடிகை - சோகத்தில் திரையுலகம்!
இளம் நடிகை அயிந்திரில்லா ஷர்மா மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த்ரிலா ஷர்மா
பிரபல மேற்குவங்க நடிகை அந்த்ரிலா ஷர்மா. இவர் 'ஜுமுர்' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அறிமுகமாகி பெங்காளி தொலைக்காட்சியில் பிரபலமாக இருந்து வந்தார். அதனைத் தொடர்ந்து ஜிபோன் ஜோதி, ஜியோன் கதி உட்பட முக்கிய படங்களில் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளார்.

இவருக்கென தனிரசிகர் பட்டாளமும் உள்ளது. இவர் ஏற்கனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இரண்டுமுறை அறுவைசிகிச்சை செய்துகொண்டு அதிலிருந்து குணமடைந்த நிலையில், சமீபத்தில் மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
மறைவு
இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டிருந்தார். கோமா நிலைக்கு சென்ற அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதால் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாமல் கவலைக்கிடமாக இருந்து வந்தார்.

இந்நிலையில், திடீரென அடுத்தடுத்து மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவல் நடிகையின் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரணிலின் இல்லத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம்! அரகலயவின் பின்னணியில் தொடுக்கப்பட்ட வழக்கிலிருந்து 6 பேர் விடுதலை IBC Tamil