பிரபல திரைப்பட கலை இயக்குநர் மாரடைப்பால் காலமானார் - திரைத்துறையினர் இரங்கல்

Rajinikanth A.R. Murugadoss
By Thahir Oct 24, 2022 04:56 AM GMT
Report

தர்பார், சர்கார் உள்ளிட்ட திரைப்படங்களில் கலை இய்குனராக பணியாற்றிய சந்தானம் மாரடைப்பு காலமானார்.

கலை இயக்குநர் காலமானார்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் கலை இயக்குநராக பணியாற்றியவர் சந்தானம்.

பிரபல கலை இயக்குநரான இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட உயிரிழந்த சம்பவம் திரைத்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

பிரபல திரைப்பட கலை இயக்குநர் மாரடைப்பால் காலமானார் - திரைத்துறையினர் இரங்கல் | The Film Art Director Died Of A Heart Attack

இவர் ஆயிரத்தில் ஒருவன், தெய்வத்திருமகள், சர்கார், தர்பார், உள்ளிட்ட படங்களில் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

கடந்த சில மாதங்களாக ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் கவுதம் கார்த்தி நடிப்பில் உருவாகும் 1947 என்ற படத்திலும் அவர் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.