நடிகை அதிதியின் முன்னாள் கணவர் யார் தெரியுமா? அவரும் பிரபல நடிகர் தான்.!
நடிகை அதிதிராவ் தனது முன்னாள் கணவருடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
நடிகை அதிதிராவ்
மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்அதிதி ராவ் ஹைதாரி. அதனைத் தொடர்ந்து சைக்கோ, செக்கச் சிவந்த வானம், ஹே சினாமிகா போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார்.
அவ்வப்போது நடிகர் சித்தார்த்துடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம், வீடியோ என வெளியாகி வண்ணம் இருந்தது. தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டனர். அதன்படி, இருவரும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டனர்.
முதல் கணவர் இவர்தான்..
மேலும், விரைவில் இருவரின் திருமணம் நடைபெரும் என எதிர்பார்க்கபடுகிறது. இந்நிலையில், அதிதி ராவின் முன்னாள் கணவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தனது 21வயதிலேயே சத்யதீப் மிஸ்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். சத்யதீப் மிஸ்ராவும் பாலிவுட் நடிகர். இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர்.
சத்யதீப் மிஸ்ரா பாலிவுட்டின் பிரபல நடிகை குப்தாவின் மகள் , மற்றும் பாலிவுட்டின் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளரான மசபா குப்தாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.