பிரபல நடிகையின் மகளை திருமணம் செய்த அதிதியின் முன்னாள் கணவர்!

Sumathi
in பிரபலங்கள்Report this article
நடிகர் சத்யதீப் மிஸ்ராவுக்கும், நடிகை நீனா குப்தாவின் மகள் மசாபாவுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.
சத்யதீப் மிஸ்ரா
பிரபல பாலிவுட் நடிகையான நீனா குப்தாவின் ஒரே மகள் மசாபா. ஆடை வடிவமைப்பாளரான அவர் பாலிவுட்டில் மிகவும் பிரபலமானவர். இவரும் நடிகர் சத்யதீப் மிஸ்ராவும் காதலித்து வந்தனர். தொடர்ந்து அவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில் சத்யதீப் மிஸ்ராவும் காதலித்து வந்தனர்.
திருமணம் செய்துள்ளனர். மசாபா வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது இருவருக்குமே 2வது திருமணமாகும்.
2வது திருமணம்
முன்னதாக சினிமா தயாரிப்பாளர் மது மான்டேனாவை காதலித்து கடந்த 2015ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் மசாபா. பின் பிரச்சணை காரணமாக விவாகரத்து பெற்றனர். சத்யதீப் மிஸ்ரா நடிகை அதிதி ராவ் ஹைதரியை காதலித்து திருமணம் செய்தார்.
ஆனால் அந்த திருமணம் கடந்த 2013ம் ஆண்டு விவாகரத்தில் முடிந்துவிட்டது. இந்நிலையில், அதிதி நடிகர் சித்தார்த்தை காதலித்து வருவதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.