வெறும் அழகை நம்பி பொழப்பு தேட முடியாது.. குறைந்தபட்ச தகுதி வேண்டும் - ஜோவிகாவை சாடிய பிரபலம்!
ஜோவிகா பேசியது குறித்து திரையுலக பிரபலம் ஒருவர் பேட்டியளித்துள்ளார்.
பிக் பாஸ்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 2 வாரமாக நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் முதல் வாரத்தில் இருந்தே சண்டையை ஆரம்பித்துவிட்டனர். இதில் கலந்துகொண்ட நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா தனக்கு படிப்பு வரவில்லை, அதனால் ஆக்ட்டிங் கோர்ஸ் படிக்கிறேன் என்று கூறியது பேசுபொருளானது.
மேலும், ஜோவிகாவிடம் நடிகை விசித்ரா தமிழில் எழுதிக் காட்டச் சொன்னார், ஆனால் அதற்கு ஜோவிகா எனக்கு தமிழ் வராது, அதனால நான் எழுதமாட்டேன் என்று பேசியது வாக்குவாதம் ஏற்பட்டு விவாதமானது.
பிரபலம் பேட்டி
இந்நிலையில், திரையுலக பிரபலமான நடிகை கஸ்தூரி இது குறித்து பேசியுள்ளார். அதில் அவர், "நான் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கல, பின்னாடியும் பார்க்கல. ஆனால், இணையத்தில் ஜோவிகா வாழ்க்கையில் ஜெயிப்பதற்கு கல்வி தேவையில்லை என்று ஆக்ரோஷமா பேசிய வீடியோவை பார்த்தேன். கல்வி என்பது அடிப்படை தகுதி என்பதை விட, வாழ்க்கைக்கு ஒரு பேக்கப்பாக படிப்பை சொல்லலாம்.
ஜோவிகாவிற்கு பணம் இருக்கிறது, குடும்ப பின்னணி இருக்கு. அவர் ஏற்கனவே ஜெயித்துவிட்டார் என்பதால், ஜோவிகாவிற்கு கல்வி தேவையே இல்லை. ஆனால், வாழ்க்கையில் போராடுபவர்களுக்கு கல்வி என்பது தேவையான ஒன்று, அழகை நம்பி பொழப்பு தேடமுடியாது.
ஆனால், படிப்பில் குறைந்தபட்ச தகுதி இருந்தா, ஏதோ ஒரு நேரத்தில் வாழ்க்கையோடு போராட அது உதவியாக இருக்கும். ஜோவிகா தற்போது தேர்ந்து எடுத்து இருப்பது கலைத்துறை இதற்கு சம்பளம் கிடைக்குமா கிடைக்காதானு யாருக்கு தெரியும்" என்று கூறியுள்ளார்.