ஸ்கூல் படிக்கும் போதே அது நடந்துருச்சு..!! கூச்சத்துடன் ஒப்புக்கொண்ட நடிகை அபிராமி..!!
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடன் கேட்கப்பட்ட விவகாரமான கேள்விக்கு நடிகை அபிராமி கூச்சத்துடன் பதிலளித்துள்ளார்.
நடிகை அபிராமி
தமிழில் அர்ஜுன் நடிப்பில் வெளியான "வானவில்" படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அபிராமி. தொடர்ந்து மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின், விருமாண்டி என அடுத்தடுத்து படங்களில் நடித்து முன்னணி நாயகியாக முன்னேறினார்.
தமிழை கடந்து மலையாளம், கன்னடம், தெலுங்கு பட மொழிகளில் தொடர்ந்து நடித்து வந்த அபிராமி, 2009-ஆம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டு திரைஉலகில் இருந்து ஒதுங்கினார். இவர்கள் அண்மையில் கல்கி என்ற குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர்.
அது நடந்துருச்சு
பிரபலங்கள் பலரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேள்வி பதில் விஷயத்தில் பல சுவாரசிய தகவல்களை தெரிவித்து வருகின்றனர். அப்படி நடிகை அபிராமியிடம் பள்ளியில் படிக்கும் போதே யாருக்காவது முத்தம் கொடுத்து இருக்கிறீர்களா..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு தயங்கி தயங்கி பதிலளித்த நடிகை அபிராமி "ஆம்" என்றே தலையசைத்தார். இது தற்போது இணையத்தில் பிரபலமாகி வருகின்றது. அபிராமி தற்போது கமல் - மணிரத்னம் கூட்டணியில் மிக பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் "Thug Life" படத்தில் நடிக்கவுள்ளார் என wikipedia பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.