ரஜினிக்கு தலித் அரசியல்லாம் தெரியாது; வருங்கால பிரதமர் வேட்பாளர் அவர்தான் - நடிகை ஆர்த்தி

Rajinikanth Vijay K. Annamalai
By Sumathi Apr 16, 2024 09:00 AM GMT
Report

ரஜினிக்கு தலித் அரசியல் தெரியாது என நடிகை ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

நடிகை ஆர்த்தி 

நடிகை ஆர்த்தி அண்மையில் தான் பாஜகவில் இணைந்தார். தற்போது பாஜகவின் நட்சத்திர பேச்சாளராக தீவிர பணியில் உள்ளார்.

aarthi - rajinikanth

அதன்படி, அவர் அளித்த பேட்டி ஒன்றில் திராவிடக் கட்சிகள் மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் நடந்து கொள்ளவில்லை. 2021-ம் ஆண்டு முதல்வர் ஸ்டாலின் என்ன வாக்குறுதிகள் கொடுத்தாரோ அதை செய்யவில்லை.

அதையேதான் 2024-ம் ஆண்டும் வாக்குறுதிகளாகக் கொடுத்துள்ளார். இந்தியா கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர் என்பதையே அறிவிக்கவில்லை. இதுவே மக்களுக்குப் பெரிய குழப்பம். ரஜினிக்கு தலித் அரசியல் தெரியாது.

வடிவேலு நல்லா நடிச்சுட்டா இப்படி பேசுவாரு; அப்புறம் மோசமான வேலை பாப்பாரு - கொந்தளித்த ஆர்த்தி

வடிவேலு நல்லா நடிச்சுட்டா இப்படி பேசுவாரு; அப்புறம் மோசமான வேலை பாப்பாரு - கொந்தளித்த ஆர்த்தி

அரசியலில் ரஜினி

அவருடைய கதாபாத்திரம் என்ன பேச வேண்டும் எப்படியான நடிப்பு வேண்டும் என இயக்குநர் எதிர்பார்க்கிறாரோ அப்படித்தான் ஒரு நடிகர் நடிக்க முடியும். அதைத்தான் ரஜினியும் செய்திருக்கிறார். அவர் ஒரு கட்சியின் தலைவராக இருந்தால் மற்றவர்கள் மனது புண்படுமா என ரஜினி யோசித்து இருக்கலாம்.

annamalai - vijay

ஆனால், ஒரு நடிகராக அவர் முழு நேரமாக அதைப் பற்றியே யோசிக்க முடியாது. 2026-ல் சிறந்த முதல்வர் வேட்பாளர், வருங்கால பிரதமர் வேட்பாளர் அண்ணாமலை அண்ணன் தான். அண்ணன் ஐபிஎஸ் படித்தவர். அவருக்கு சட்டம் தெரியும்.

மிகுந்த அறிவு இருக்கு. இந்த அளவுக்கு அறிவு விஜய்க்கு இருக்கிறதா என்பது இனிமேல் அவருடைய பிரஸ் மீட், செயல்பாடுகளில்தான் தெரிய வரும் எனத் தெரிவித்துள்ளார்.