விஜய் கூட அப்படியா; கூப்பிட்டாங்க.. நடிக்கவே மாட்டேன் - கறார் காட்டிய இளம் நடிகை!
விஜய்யுடன் படம் நடிப்பது குறித்து நடிகை சஞ்சனா சாரதி மனம் திறந்துள்ளார்.
நடிகை சஞ்சனா சாரதி
நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படங்களில் ஒன்று துப்பாக்கி. வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை படைத்தது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார்.
அவருக்கு தங்கையாக 2 நடிகைகள் நடித்திருந்தனர். அதில் விஜய்க்கு இளைய தங்கையாக நடித்தவர் சஞ்சனா சாரதி. தற்போது வளர்ந்து பயங்கர மாடர்னாக மாறிவிட்டார். தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில்,
விஜய் படத்திற்கு மறுப்பு
"நான் அந்த படத்தின் பெயர் குறிப்பிட விரும்பவில்லை. இன்னொரு விஜய் சார் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. அந்த படத்திலும் விஜய் சாருக்கு தங்கையாக நடிக்க கூப்பிட்டாங்க. அந்த ரோல் அவருடன் ரொம்ப கம்மி screen டைம் இருந்தது. அதனால் நான் வேண்டாம்னு சொல்லிட்டேன்.
எனக்கு நல்ல கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ரோலில் நடிக்க வேண்டும் என்று ஆசை.
இதற்கு முன்பு விஜய் சாருக்கு தங்கையாக நடித்துவிட்டேன். திரும்ப திரும்ப இப்படி நடித்துக்கொண்டு இருந்தால் நம்மை அந்த ரோலுக்கு brand பண்ணிருவாங்க. இது தான் காரணம்" எனத் தெரிவித்துள்ளார்.