சீரியல் சூட்டிங்கில் வழுக்கட்டாயமாக.. பிரபல நடிகர்கள் மீது நடிகை பாலியல் புகார் - இவர்களா?
பிரபல நடிகர்கள் மீது மலையாள நடிகை ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார்.
ஹேமா கமிட்டி
மலையாள திரையுலகில் வாய்ப்புகளைப் பெற பெண்கள் பாலியல் ரீதியாக (casting couch) சுரண்டப்படுகிறார்கள் என்று ஹேமா கமிட்டி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹேமா கமிட்டி அறிக்கைக்குப் பிறகு மலையாள நடிகைகள் பலரும் நடிகர்கள் மீது அடுத்தடுத்து பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.இந்த குற்றச்சாட்டுகள் கேரள திரைத்துறையை மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த திரைத்துறையும் உலுக்கியது.
இந்த நிலையில், சினிமாவில் வாய்ப்பு தருவதாக தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக மலையாள சீரியல் நடிகை ஒருவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார். சீரியல் படப்பிடிப்பில் தான் கலந்து கொண்டிருந்தபோது நடிகர் பிஜூ ஷோபானம், ஸ்ரீகுமார் ஆகியோர்
பாலியல் புகார்
தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இது குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக புகார் அளித்தார். இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தியது.
இது குறித்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்ஃபோ பார்க் காவல் துறையினருக்கு அறிவுறுத்தினர். இதையடுத்து, நடிகர்கள் பிஜூ ஷோபானம், ஸ்ரீகுமார் ஆகியோர் மீது போலீசார் பாலியல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த சூழலில், நடிகர்கள் மீது புகார் கொடுத்த அந்த நடிகை தான் நடித்து வந்த சீரியலில் இருந்து விலகி உள்ளது குறிப்பிடத்தக்கது. புகார் அளித்ததற்காக அந்த நடிகை சீரியலில் இருந்து விலக்கப்பட்டதாகவும் வெளியான தகவல் வெரும் சர்ச்சையாக வெடித்தது.