சொந்தமாக கோயில் வைத்திருக்கும் பிரபலமான நடிகர்கள் - எங்கெங்கு உள்ளது தெரியுமா?
நடிகர் அர்ஜுனை தொடங்கி விஜய் வரை சொந்தமாக கோயில் காட்டியுள்ளனர்.
சொந்தமாக கோயில்
இந்தியாவில், பல திரை நட்சத்திரங்ககள் அடிக்கடி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வரும் செய்திகளை பார்க்கிறோம். அப்படியாக கடவுள் மீது உள்ள மிகுந்த பக்தியில் சில பிரபலங்கள் தங்களுக்காகவோ அல்லது அவர்களுக்கு பிடித்தவர்களுக்கோ சொந்தமாக கோயில் கட்டுவது தற்போது வழக்கமாகியுள்ளது.
அந்த வகையில், விஜய், அர்ஜூன் என ஆரம்பித்து பல நடிகர்கள் கோயில் கட்டியுள்ளனர்.
விஜய்
அண்மையில், நடிகர் விஜய் சாய்பாபா கோயிலில் எடுத்த புகைப்படமானது இணையத்தில் பரவி படு வைரலானது. அதை பார்த்த பலரும் ‘விஜய் பாஜகவில் இணைந்துவிட்டார்' எனவும் அரசியல்- மதச்சாயம் பூசுகிறார் என்று கூறப்பட்டதும் உடனே அது நீக்கப்பட்டது.
ஆனால், புகைப்படத்தில் தென்படும் அந்த கோயிலை நடிகர் விஜய் தனது அம்மா ஷோபாவுக்காகக் கட்டிக் கொடுத்திருக்கிறார் என்று பின்னர் தெரியவந்துள்ளது. தீவிர சாய்பாபா பக்தையான ஷோபாவுக்கு கொரட்டூரில் 8 கிரவுண்ட் நிலப்பரப்பில் விஜய் இந்த சாய்பாபா கோயிலை அமைத்துள்ளார். இந்த கோயிலுக்கு கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடந்து முடிவடைந்தது.
அர்ஜூன்
நடிகர் அர்ஜூன் ஒரு தீவிர ஆஞ்சநேய பக்தரென அவர் நடித்த சில படங்களில் தெரிந்திருக்கும். அந்த பக்தியின் காரணமாக போரூர் கெருகம்பாக்கத்தில் உள்ள தோட்டத்தில் பிரம்மாண்டமான அனுமன் சிலையை நிறுவிய கோயில் ஒன்றை கட்டி இருக்கிறார்.
இதில், ஆஞ்சநேயர் அமர்ந்த நிலையில் அருள் தருவார். ஒரே கல்லில் செய்யப்பட்ட இந்தத் திருமேனிகர்நாடக மாநிலம் கொய்ரா கிராமத்தில் செய்யப்பட்டது.சுமார் 28 அடி உயரமும் 17 அடி அகலமும் உள்ள 200 டன் எடை கொண்ட சிலை ஆகும். தனது குடும்பத்தோடு அவ்வப்போது வந்து தரிசனம் மேற்கொள்ளும் அர்ஜூன், மகள் ஐஸ்வர்யாவின் நிச்சயதார்த்தமும் இங்குதான் நடைபெற்றது.
ராகவா லாரன்ஸ்
நடிகர் ராகவா லாரன்ஸ் தன் மீது கொண்ட அளவுக்கடந்த பிரியம் மற்றும் அன்பனின் வெளிபாடாக அவருக்கு கட்டியுள்ளார். தனது தாய் கண்மணியின் சிலையை ராஜஸ்தானில் செய்யப்பட்டு பின் சென்னைக்கு கொண்டு வரவழைத்தார்.
சென்னை திருமுல்லைவாயிலில் உள்ள ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் அமைந்துள்ள இந்த கோயிலில் அவரது அம்மா சிலையை நிறுவினார். அன்னையர் தினத்தில் இந்த கோயிலைத் திறந்தும் வைத்தார்.மேலும், இங்கு காயத்ரி தேவி சிலை மற்றும் சிவலிங்கமும் உள்ளது.
டேனியல் பாலாஜி
தமிழ் சினிமாவில் பல கதாபாத்திரங்களில் நடித்த டேனியல் பாலாஜி அண்மையில் மாரடைப்பால் உயிரிழந்தார். இவர் தனது தாய் மீது கொண்ட அன்பால் ஆவடியில் ரகதூள் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலைக் கட்டினார்.
இந்த கோயில் கடந்த 2019 ஆம் ஆண்டு கட்டத் தொடங்கி, இந்த ஆண்டு மார்ச் 9-ம் தேதி அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.