கோவிலில் யோகிபாபுவிற்கு ஏற்பட்ட தீண்டாமை - வைரல் வீடியோ

Tamil Cinema Tamil nadu Actors Yogi Babu
By Karthick Aug 07, 2023 08:12 AM GMT
Report

நடிகர் யோகிபாபுவிற்கு கோவில் ஒன்றில் தீண்டாமை நடந்தது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

யோகிபாபு   

தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் பிஸியான நடிகர் என்றால் அது நடிகர் யோகிபாபு தான். நாயகனாகவும், காமெடி கதாபாத்திரத்திலும் தொடர்ந்து நடித்து வரும் அவர், அவ்வப்போது கோவில்களுக்கும் நேரில் சென்று வழிபட்டு வருகின்றார்.

yogibabu-faces-untouchability-in-temple

கடைசியாக யோகிபாபு தோனி தயாரிப்பில் வெளியான எல்.ஜி.எம் படத்தில் நடித்திருந்தார். தற்போது 10-ஆம் தேதி வெளியாகவுள்ள ஜெயிலர் படத்திலும் அவர் ரஜினியுடன் நடித்திருக்கிறார்.

கோவிலில் தீண்டாமை  

முருகரின் தீவிர பக்தராக இருந்து வரும் யோகிபாபு, அண்மையில் சென்னையை அடுத்து சிறுவாபுரியில் அமைந்துள்ள சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு நேரில் சென்று வழிபட்டுள்ளார். 


அப்போது அங்கிருந்த கோவில் அர்ச்சகர் ஒருவரை பார்த்ததும் யோகிபாபு அவருக்கு கை கொடுக்க,ஆனால் அந்த அர்ச்சகர் கை கொடுப்பதற்கு மறுத்துவிட்டு பேச ஆரம்பித்து விட்டார். இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் பலரும் இந்த ஒரு தீண்டாமை என சரமாரியாக அர்ச்சகரை விமர்சித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.