நிரா..நீ என் நிரா..சிம்பிளாக நடந்த சித்தார்த் - அதிதி ராவ் திருமணம்; வைரலாகும் போட்டோ!
நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் திருமணம் இன்று நடைபெற்றுள்ளது.
சித்தார்த் - அதிதி
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சித்தார்த். பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானார். மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.
நடிகை அதிதியுடன் இணைத்து காதல் கிசுகிசுவில் அவ்வப்போது சிக்கிக்கொள்வார். இருவரும் இணைந்து பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதுடன், இன்ஸ்டாகிராமில் இணைந்து பல ரீல்ஸ்களைச் செய்திருந்தனர்.
திருமணம்
அண்மையில, இருவருக்கும் வனபர்த்தி மாவட்டம் ஸ்ரீரங்கப்பூரில் உள்ள ரங்கநாத ஸ்வாமி கோவிலில் அதிதியின் குடும்பத்திற்கு நெருங்கிய தொடர்பு உள்ள நிலையில் நிச்சயதார்த்தம் நடந்தது.
இந்த நிலையில் இன்று சித்தார்த் - அதிதி ராவ் திருமணம் இரு குடும்பத்தினர் சூழ நடைபெற்றது. 'நீ என் சூரியன், என் சந்திரன் மற்றும் என் நட்சத்திரம்' என்று குறிப்பிட்டு திருமண புகைப்படங்களை இருவரும் கூட்டாக தங்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அதற்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.