திமுகவுக்கு குவியும் ஆதரவு; விறுவிறுப்பான தேர்தல் பிரச்சாரம்- களத்தில் நடிகர்கள் பட்டாளம்!

Kamal Haasan DMK Lok Sabha Election 2024
By Swetha Mar 29, 2024 12:30 PM GMT
Report

மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக ஏராளமான நடிகர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளதாக தெரியவந்துள்ளது.

தேர்தல் பிரச்சாரம்

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலின் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது களம் சற்று சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. பிரச்சாரத்திற்கு இன்னும் சில நாட்களே மிச்சம் உள்ளதால் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்கள் பரப்புரையை வேகப்படுத்தியுள்ளனர்.

திமுகவுக்கு குவியும் ஆதரவு; விறுவிறுப்பான தேர்தல் பிரச்சாரம்- களத்தில் நடிகர்கள் பட்டாளம்! | Actors Election Campaign In Support Of Dmk

முக்கிய அரசியல் கட்சிகளான திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் தங்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர்.

சேல்ஸ்மேன் மாதிரி விளம்பரம்; மோடி வாக்குறுதிக்கு கேரண்டி இல்ல - முதல்வர் காட்டம்!

சேல்ஸ்மேன் மாதிரி விளம்பரம்; மோடி வாக்குறுதிக்கு கேரண்டி இல்ல - முதல்வர் காட்டம்!

நடிகர்கள் பட்டாளம்

இதையடுத்து, தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்ய29 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 640 பேர் நட்சத்திர பேச்சாளர்களுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதில், அதிமுகவுக்கு ஆதரவாக நடிகை விந்தியா உள்ளிட்ட பலரும் பிரச்சாரம் செய்யவுள்ளனர்.

திமுகவுக்கு குவியும் ஆதரவு; விறுவிறுப்பான தேர்தல் பிரச்சாரம்- களத்தில் நடிகர்கள் பட்டாளம்! | Actors Election Campaign In Support Of Dmk

இந்நிலையில், திமுகவுக்கு ஆதரவாகவும் ஏராளமான நடிகர்கள் பிரச்சாரம் மேற்கொள்ளும் அந்தப் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. திமுக கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பல்வேறு தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

அதே போல முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ் தென் மாவட்டங்களில் திமுக கூட்டணிக்காக பிரச்சாரம் செய்ய உள்ளார். நடிகர்கள் வாசு விக்ரம், போஸ் வெங்கட் உள்ளிட்டவர்களும் திமுக ஆதரவாக பரப்புரையாற்றுகின்றனர்.

திமுகவுக்கு குவியும் ஆதரவு; விறுவிறுப்பான தேர்தல் பிரச்சாரம்- களத்தில் நடிகர்கள் பட்டாளம்! | Actors Election Campaign In Support Of Dmk

இதை தவிர்த்து திமுகவில் ஏற்கனவே உறுப்பினர்களாக உள்ள நடிகர்கள் பலர் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.மேலும், எழுத்தாளர் மதிமாறன், பேச்சாளர் நாஞ்சில் சம்பத் உள்ளிட்டவர்களும் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.