இளம்பெண்ணுடன் நெருக்கமாக நடிகர் விஷால்; கேமராவை கண்டதும் செய்த செயல் - வைரல் வீடியோ!

Vishal Tamil Cinema Viral Video New York
By Sumathi Dec 26, 2023 08:09 AM GMT
Report

நடிகர் விஷால் குறித்த வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர் விஷால்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் பட தயாரிப்பில் ஈடுபட்டு வந்தார். அரசியலிலும் களமிறங்கி அது கைக்கூடாமல் போனது.

actor vishal

தென்னிந்தியா நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக இருக்கிறார். சினிமா தாண்டி இதர பொது வேலைகளில் கவனம் செலுத்தியதால் திரைப்படங்கள் வெளியாகி தோல்விகளையே சந்தித்தது.

நடிகை லட்சுமி மேனனுடன் திருமணம் - உறுதிசெய்த நடிகர் விஷால்!

நடிகை லட்சுமி மேனனுடன் திருமணம் - உறுதிசெய்த நடிகர் விஷால்!

வைரல் வீடியோ

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அண்மையில் அவர் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. வசூலிலும் சாதனை படைத்தது. மறுபுறம், இவர் தற்போது வரை சிங்கிளாக இருப்பதால் பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார்.

இந்நிலையில், விஷால் நியூயார்க் சிட்டியில் இளம் பெண்ணுடன் வலம் வந்துள்ளார். அப்போது அவரை சிலர் வீடியோ எடுப்பதை கவனித்து, முகத்தை மூடிக்கொண்டு அந்த பெண்ணுடன் ஓடுகிறார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை சிலர் இது படத்திற்கான புரொமோஷன் என கமெண்ட் செய்து வருகின்றனர்.