திருமணம் வரை சென்று அர்ஜுன் ரெட்டி பட நடிகையைக் கழட்டி விட்ட நடிகர் விஷால்?
நடிகர் விஷால் திருமணம் குறித்த செய்திகள் வெளியாகியுள்ளது.
நடிகர் விஷால்
விஷால் பிரபல தயாரிப்பாளர் ஜி.கே ரெட்டி அவர்களின் மகன் ஆவர். விஷால் நடிகர் அர்ஜுனிடம் உதவியாளராக பனி புரிந்தார். பின்னர் "செல்லமே" என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரை உலகில் அறிமுகமானார்.
தொடர்ந்து இவர் நடித்த சண்டக்கோழி,திமிரு போன்ற படங்கள் பெரும் வெற்றி பெற்றது. தற்போது தென்னிந்தியா நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக இருக்கிறார் விஷால்.
இவர் நடிப்பில் மார்க் ஆண்டனி படம் விரைவில் வெளியாக இருக்கிறது. விஷால் கடந்த 2019ம் ஆண்டு பிரபல தொழிலதிபரின் மகளும் தெலுங்கு பட நடிகையுமான அனிஷா அல்லா ரெட்டியை காதலித்தார்.
இவர் அர்ஜுன் ரெட்டி படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இருவரும் காதலித்து வந்த நிலையில் விஷால் அனிஷாவுக்கு இருவீட்டார் சம்மதத்துடன் ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
அப்போது இவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அனிஷா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். திருமணத்திற்கு தேதி குறிக்கப்பட்டுள்ளது என்றும் விரைவில் திருமணம் நடைபெறும் என்றும் செய்திகள் வெளியானது .
திருமணம் நின்றது
இந்நிலையில் சில நாட்களில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக திருமணம் நின்றுவிட்டது என்று தகவல்கள் வெளியாகின.
இதற்கு பதிலளித்த விஷாலின் அப்பா " புதிதாக கட்டப்படும் நடிகர் சங்க கட்டிடத்தில் தான் தனது திருமணம் நடக்க வேண்டும் என்பதில் விஷால் உறுதியாக இருப்பதாகவும், அதனால் தான் திருமணத்தில் தாமதம் ஏற்படுகிறது என்றும், நடிகர் சங்க பிரச்சனை நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் உடனே திருமணத்தை நடத்த முடியவில்லை எனவும் அவர் விளக்கமளித்தார்.
ஆனால் சில நாட்கள் கழித்து அனிஷா தானும் விஷாலும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை இன்ஸ்ட்டாகிராமில் இருந்து நீக்கினார்.
இதனால் இவர்களில் திருமணம் நின்று விட்டது உண்மைதான் என்று கூறப்படுகிறது. இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை.