ஆமா.. அந்த மாதிரி படம் பார்த்து மாட்டிகிட்டேன், அப்போ என் அப்பா இதை செய்தார் - ஓப்பனாக பேசிய விஷால்!

Vishal Tamil Cinema Actors Tamil Actors
By Vinothini Sep 12, 2023 03:30 PM GMT
Report

அந்த மாதிரி படத்தை பார்த்து தந்தையிடம் மாட்டிக்கொண்டதாக நடிகர் விஷால் வெளிப்படையாக கூறியுள்ளார்.

நடிகர் விஷால்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். இவர் செல்லமே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார், முதல் படமே வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ளார்.

actor-vishal-opens-about-his-childhood-memories

இவர் நடிகர் சங்கத்தின் தலைவராக உள்ளார், நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடித்த பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறி பிடிவாதமாக இருந்து வருகிறார். தற்பொழுது இவர் நடித்துள்ள மார்க் ஆண்டனி என்ற படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது, அது பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.

நடிகர் பேட்டி

இந்நிலையில், இவர் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் தந்தையிடம் மாட்டிக்கொண்டது குறித்து பேசியுள்ளார். அதில் அவர், "ஆம் மாட்டியிருக்கிறேன். வீட்டில் யாரும் இல்லாதபோது அந்தப் பட கேசட்டை வாடகைக்கு எடுத்து நானும் நண்பர்களும் பார்த்தோம். பிறகு அந்த கேசட்டை ஒரு கபோர்டில் வைத்துவிட்டேன். அப்பா வெளியிலிருந்து வந்த பிறகு உள்ளே சென்றுவிட்டு ஹாலுக்கு வந்தார்.

actor-vishal-opens-about-his-childhood-memories

அப்போது அவரது கையில் ஒரு கேசட் இருந்தது. எனது முன்பு அந்த கேசட்டை ஆட்டிக்கொண்டே என்னை பார்த்தவாறு நின்றார். எதுவுமே பேசவில்லை. நானும் ஒன்றும் தெரியாததுபோல் இருந்தேன். பிறகு உள்ளே சென்று அந்த கபோர்டில் பார்த்தால் கேசட் இல்லை. சரி அந்த கேசட்தான் இது என்று உறுதி செய்துகொண்டேன்.

டைனிங் டேபிளில் வந்து அமர்ந்தபோது டியூஷன் எத்தனை மணிக்கு என்று கேட்டார். நான் 8 மணிக்கு என்று சொன்னேன். சரி என்று சொல்லிவிட்டு அந்த கேசட்டை அங்கேயே வைத்துவிட்டு எதுவுமே சொல்லாமல் போய்விட்டார். அந்த அமைதிதான் என்னை மாற்றியது" என்று கூறியுள்ளார்.