தனுஷ் என்கிட்ட சொன்னது இது மட்டும் தான் - வெளிப்படையாக சொன்ன பிரபல நடிகர்

dhanush FIR vishnuvishal udhayanidhistalin
By Petchi Avudaiappan Feb 04, 2022 12:28 AM GMT
Report

நடிகர் தனுஷ் தன்னை பாராட்டியதாக நடிகர் விஷ்ணு விஷால் கூறியுள்ளார். 

தமிழ் சினிமாவின் பன்முக கலைஞர் என்றழைக்கப்படும் நடிகர் தனுஷ் சமீபத்தில் தனது காதல் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இந்த சம்பவம் ரசிகர்கள், திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தனுஷ் என்கிட்ட சொன்னது  இது மட்டும் தான் - வெளிப்படையாக சொன்ன பிரபல நடிகர் | Dhanush Praised Vishnu Vishal

இந்த சம்பவத்திற்குப் பின் மீண்டும் படங்களில் பிசியாக நடித்து வரும் தனுஷ் குறித்து பல்வேறு தகவல் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் தனுஷ் FIR படத்தைப் பார்த்து விட்டு நடிகர் விஷ்ணு விஷாலை வெகுவாக பாராட்டியுள்ளார்.

 பிப்ரவரி 11 தேதி திரையரங்கில் வெளியாகவுள்ள இப்படத்தின் விழாவில் பேசிய விஷ்ணு விஷால் ராட்சசன் படத்திற்கும் இப்படத்திற்கும் எனது நடிப்பில் நிறைய மாற்றங்கள் உள்ளதாகவும் நடிப்பில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் தனுஷ் கூறியதாக தெரிவித்துள்ளார். 

மேலும் விஷ்ணு விஷால் தயாரித்த இப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக உதயநிதி வாங்கி வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.