ஒருவழியாக திருமணம் செய்துக்கொள்ளப்போகும் விஷால்; இவரா? பொண்ணு யார் பாருங்க..
நடிகர் விஷால் திருமணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஷால்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். இவர் தற்போது வரை சிங்கிளாக இருப்பதால் பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார்.

அந்த வரிசையில், நடிகை லட்சுமி மேனனுடன் இணைந்து பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன் போன்ற படங்களில் நடித்திருந்தார். இதில் இவர்கள் கெமிஸ்ட்ரி பக்கவாக இருந்ததால், இருவரும் காதலிப்பதாக கிசுகிசு எழுந்தது.
திருமணம்?
தொடர்ந்து, விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார். இவர் அமெரிக்காவில் இருந்த போது ஒரு பெண்ணோடு சுற்றிவரும் வீடியோ வெளியாகி காதலி என வைரலான நிலையில், பிராங் வீடியோ என்பது தெரியவந்தது.

இதற்கிடையில், ஹைதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபரின் மகளோடு நிச்சயதார்த்தம் நடைபெற்று, திருமணம் நின்று போனது. இந்நிலையில், இவர் நடிகை அபிநயாவை காதலிப்பதாக கூறப்படுகிறது. நாடோடிகள், பூஜை, குற்றம் 23, ஈசன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
விரைவில் பெற்றோர்களின் சம்மதத்தோடு திருமணம் நடக்க உள்ளதாக செய்திகள் பரவி வருகிறது. இருப்பினும், இதுகுறித்த எந்த அறிவிப்பையும் இருதரப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
You May Like This Video
ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்படவுள்ள திட்டம் : யாழ்ப்பாணம் உட்பட ஐந்து மாவட்டங்களில் திறக்கப்படவுள்ள அலுவலகங்கள் IBC Tamil
தேர்தல் மேடைகளில் போர் வீரராக தன்னை முன்னிறுத்திய கோட்டாபயவின் உண்மை முகம் நீதிமன்றத்தில் அம்பலம் IBC Tamil