விபத்தில் சிக்கிய விஷால்..மருத்துவமனையில் அனுமதி - நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு!

Vishal Only Kollywood
By Sumathi 3 மாதங்கள் முன்

விபத்தில் சிக்கிய விஷால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் விஷால் 

நடிகர் விஷால் தற்போது ஆக்க்ஷன் த்ரில்லர் திரைப்படமான "மார்க் ஆண்டனி" திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் நிலையில் படப்பிடிப்பில் விஷாலுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கிய விஷால்..மருத்துவமனையில் அனுமதி - நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு! | Actor Vishal Admitted In Hospital

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் கடைசியாக வீரமே வாகை சூடும் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து விஷால் தன் நெருங்கிய நண்பர்களுடன் சேர்ந்து "லத்தி" என்ற திரைப்படத்தை தயாரித்து அதில் நடித்து வருகிறார்.

 முட்டியில் காயம் 

விஷாலின் முதல் பேன் இந்தியா படமாக உருவாகும் இந்த படப்பிடிப்பில் அவர்க்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் அவர் காயமடைந்த அந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வந்தது.

இதனால் படப்பிடிப்பும் ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே தற்போது மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தில் நடித்து வந்த விஷாலுக்கு முட்டியில் மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளது. ஆக்க்ஷன் காட்சியில் நடிக்கும்போது இந்த விபத்து நடந்தது என படக்குழுவினர் தெரிவித்தனர்.

மருத்துவமனையில் அனுமதி

இதனையடுத்து விஷால் தற்போது அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, விஷால் விரைவில் குணமடைய வேண்டும் என அவரின் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.