விஜய் ஆசையாக வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் கார் - second hand விற்பனைக்கு! விலை எவ்வளவு தெரியுமா?
நடிகர் விஜய் தான் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காரை விற்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
ரோல்ஸ் ராய்ஸ் கார்
பிரபல நடிகரான விஜய் பார்த்து பார்த்து ஆசையாக கடந்த 2012-இல் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் மாடல் காரை வாங்கினார். நாட்டின் சட்டத்தை பொறுத்தவரையில் சொகுசு கார் வாங்கினால், அதற்கு இறக்குமதி வாரியாக 137 சதவிகிதத்துக்கு மேல் இருந்தது.
அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்குகளில், நீதிமன்றம் விஜய்யை விமர்சித்து பேசினார்கள். ரீல் ஹீரோவாக மட்டுமில்லாமல், ரியல் ஹீரோவாக இருங்கள் என்றெல்லாம் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் பேசியது தமிழகம் முழுவதும் கவனம் பெற்றது.
விற்பனைக்கு..
வரியுடன் சேர்த்து விஜய்க்கு 1 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இவ்வாறு விஜய்யின் பெயருக்கு ஒரு களங்கமாக மாறிய அக்கார் தற்போது விற்பனைக்கு வந்துவிட்டது.
Empire Autos என்ற டீலர்ஷிப்பில் விற்பனைக்கு இக்கார் உள்ளது. காரின் second hand விற்பனை விலை என்பது ரூ.2.6 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது negotiable விலை தான் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரும் போராட்டத்திற்கு இக்காரை விஜய் வாங்கியிருக்கிறார் என்பது தெளிவாகவே தெரியும் நிலையில், எதன் காரணமாக, அவர் இந்த காரை தற்போது விற்பனை செய்கிறார் என்பது தெரியவில்லை.
"பீஸ்ட்" பட ப்ரோமோஷனுக்காக எடுக்கப்பட்ட வீடியோவில் விஜய் ஓட்டிவருவது இந்த கார் தான் என்பது குறிப்பிடத்தக்கது.