ஃபேமிலி சீக்ரெட் சொன்ன வனிதா அக்கா அனிதா.. மினுக்கும் அழகு, என்றும் இளமைக்கு இதை குடித்தால் போதுமா?

Vijaykumar Tamil Cinema Tamil Actors Tamil Actress
By Vinothini Sep 26, 2023 07:31 AM GMT
Report

நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள் அனிதா இளமையாக இருப்பதற்கான ரெசிபியை கூறியுள்ளார்.

விஜயகுமாரின் குடும்பம்

நடிகர் விஜயகுமார் என்றும் இளமையாக பளபளவென இருப்பார். அவரை பார்க்கும் அனைவரும் எப்படி 70 வயதிற்கு மேலும் இவ்வளவு இளமையாக இருக்கீங்க என்று கேட்பர். இவர் மட்டுமல்ல இவரது குடும்பத்தில் அனைவருமே பளபளவென சைனிங்காக இருப்பர்.

actor-vijayakumar-daughter-shared-secret-recepie

அந்த வகையில் நடிகர் விஜயகுமார் அவர்களுடைய குடும்பத்தில் உள்ள அனைவருமே நடிகர்கள் என்று இருக்கும் பொழுது, இவரது முதல் மனைவிக்கு பிறந்த மகள் அனிதா விஜயகுமார் மட்டும் கத்தாரில் மருத்துவராக உள்ளார்.

இளமை ரெசிபி

இந்நிலையில், அனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ரெசிபியை பகிர்ந்துள்ளார். அதன் பெயர் கிரீன் ஸ்மூத்தி, இதை காலை நேரத்தில் அருந்தினால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும். எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

actor-vijayakumar-daughter-shared-secret-recepie

மேலும், இது சருமத்தை பாதுகாக்கவும் உதவுகிறது, இதில் செலரி, வெள்ளரிக்காய், எலுமிச்சை, பார்ஸ்லே, பெர்ரிகள், இஞ்சி உள்ளிட்டவைகளை சேர்த்து அருந்தலாம் என்று தெரிவித்துள்ளார். இது தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.