விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றமில்லை - வருத்தத்தில் தொண்டர்கள்
விஜயகாந்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜயகாந்த்
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் அவர் கட்சி மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் வீட்டிலேயே ஓய்வில் இருந்து வருகிறார்.
தனது குடும்பத்தினருடன் இருக்கும் விஜயகாந்தின் புகைப்படங்கள் மட்டுமே அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகும். இதற்கிடையில் அவருக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. இதனால் அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறார்.
உடல்நிலை?
இந்நிலையில், விஜயகாந்துக்கு பருவமழையால் இருமல், காய்ச்சல், சளி தொந்தரவுகள் ஏற்பட்டதால் கடந்த 18ம் தேதி சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விஜயகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று ராகுல் காந்தி, பார்த்திபன் என அரசியல் தலைவர்களும், திரைத்துறையினரும் தெரிவித்து வருகின்றனர்.
தற்போது, விஜயகாந்திற்கு கொடுத்து வரும் சிகிச்சையால் அவரது உடல்நிலையில் பெரிதாக முன்னேற்றமும் ஏற்படவில்லை என வெளியாகியுள்ள தகவல் தொண்டர்களை கலக்கமடைய வைத்துள்ளது.