விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை; மருத்துவமனை அறிக்கை - பிரேமலதா வெளியிட்ட Video!

Vijayakanth Tamil Cinema Tamil nadu Chennai DMDK
By Jiyath Nov 30, 2023 02:42 AM GMT
Report

விஜயகாந்த் உடல்நிலை தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த். 

விஜயகாந்த் 

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் அவர் கட்சி மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் வீட்டிலேயே ஓய்வில் இருந்து வருகிறார்.

விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை; மருத்துவமனை அறிக்கை - பிரேமலதா வெளியிட்ட Video! | Vijayakanth Health Decline Intensive Hospital

தனது குடும்பத்தினருடன் இருக்கும் விஜயகாந்தின் புகைப்படங்கள் மட்டுமே அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகும். இதற்கிடையில் அவருக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. இதனால் அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறார். மேலும், நீரிழிவு பிரச்சினையால் கடந்த ஆண்டு அவருக்கு வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, அந்த விரல் அகற்றப்பட்டது.

இந்நிலையில், விஜயகாந்துக்கு பருவமழையால் இருமல், காய்ச்சல், சளி தொந்தரவுகள் ஏற்பட்டதால் கடந்த 18ம் தேதி சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் அவருக்கு சுவாசிப்பதில் சிரமம் இருப்பதால், செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. உரிய சிகிச்சைகளை அளித்து வந்த நிலையில், நேற்று அவரது உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

சீராக இல்லை 

விஜயகாந்த் உடல்நிலை குறித்து மியாட் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் பிரித்வி மோகன்தாஸ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், "விஜயகாந்த் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது.

விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை; மருத்துவமனை அறிக்கை - பிரேமலதா வெளியிட்ட Video! | Vijayakanth Health Decline Intensive Hospital

எனினும், கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது’ என்று தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக தேமுதிக பொருளாளரும் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா நேற்று இரவு வெளியிட்ட வீடியோவில் "விஜயகாந்த் உடல் நலம் குறித்து மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கை ஓர் வழக்கமான ஒன்று தான்.

அதைப் பார்த்து பயப்படவோ,பதற்றப்படவோ தேவையில்லை. விரைவில் அவர் பூரண உடல்நலம் பெற்று வீடு திரும்புவார். எனவே, யாரும் எவ்வித வதந்திகளையும் நம்ப வேண்டாம்" என தெரிவித்துள்ளார். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என பல்வேறு அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தெரிவித்து வருகின்றனர்.