அந்த விஷயத்தால் பாதித்த நடிகர் விஜய்; உருக்கமான பேச்சு - ஆறுதல் கூறும் ரசிகைகள்!

Jiyath
in பிரபலங்கள்Report this article
நடிகர் விஜய் தனது தங்கை குறித்து உருக்கமாக பேசிய ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய். ஆரம்பத்தில் இளைய தளபதியாக இருந்த இவர் தனது சிறப்பான நடிப்பால் தற்போது தளபதியாக மாறியுள்ளார்.
மேலும், அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் இருந்து வருகிறார். விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட், வாரிசு, லியோ ஆகிய 3 படங்களுமே விமர்சன ரீதியாக அடி வாங்கின. ஆனால் வசூல் ரீதியாக வெற்றி பெற்றிருப்பதாக அந்தந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய் தனது தங்கை குறித்து உருக்கமாக பேசிய ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரசிகைகள் ஆறுதல்
நடிகர் விஜய்க்கு வித்யா என்ற தங்கை இருந்ததும், ஆனால் சிறு வயதிலேயே அவர் உடல்நலக் குறைவால் இறந்து விட்டார் என்பது பலருக்கும் தெரியும். அந்த வீடியோவில் இது தொடர்பாக விஜய் கூறியதாவது "எனது வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய விஷயம் என்னவென்றால் அது என் தங்கை வித்யாவின் உயிரிழப்புதான்.
அதிலிருந்து மீள்வது கடினம். ஆனால் ஒன்று எனது தங்கையை நாங்கள் புதைக்கவில்லை. விதைத்திருக்கிறோம். அதனால்தான் எனக்கு இவ்வளவு தங்கைகள் இருக்கிறார்கள்” என்று விஜய் பேசியுள்ளார். இதனைப் பார்த்த விஜய் ரசிகைகள் பலரும் "நாங்கள் உங்களுக்கு தங்கைகளாக எப்போதும் இருப்போம் அண்ணா" என்று கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.