தளபதி69 கடைசி படம் இல்லையா? மீண்டும் அட்லீ இயக்கத்தில் விஜய்?

Vijay Bollywood Salman Khan Atlee Kumar Thalapathy 69
By Karthikraja Oct 22, 2024 12:00 PM GMT
Report

அட்லீயின் அடுத்த படத்தில் நடிகர் விஜய் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். சமீபத்தில் விஜய் நடித்த கோட் திரைப்படம் வெளியாகி வசூலில் சாதனை படைத்தது. 

தளபதி70 விஜய்

விஜய் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் தனது 69வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு விஜய் ரூ275 கோடி சம்பளம் பெறப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

விஜய் கட்சி மாநாட்டிற்கு யுவன் பாடல் அமைக்கிறாரா? அவரே சொன்ன தகவல்

விஜய் கட்சி மாநாட்டிற்கு யுவன் பாடல் அமைக்கிறாரா? அவரே சொன்ன தகவல்

தவெக மாநாடு

கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்தார். கட்சியின் முதல் அரசியல் மாநாடு வரும் அக்டோபர் 27 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

vijay tvk party

கட்சி தொடங்கும் அறிவிப்பின் போதே தனது 69 வது படத்தை முடித்து விட்டு சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியலில் ஈடுபடப்போவதாக நடிகர் விஜய் கூறி இருந்தார்.

அட்லீயின் புதிய படம்

இந்நிலையில் அட்லீ இயக்கும் புதிய படத்தில் நடிகர் விஜய் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அட்லீ பாலிவுட்டில் நடிகர் சல்மான் கான் மற்றும் கமல் ஹாசனை வைத்து தான் தனது அடுத்த படத்தை இயக்கப்போகிறார் என சொல்லப்படுகிறது.

vijay atlee thalapathy70

இந்த படத்தில் விஜய் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரபூர்வ தகவல் வராத நிலையில், விஜய் தொடர்ந்து நடிக்க வேண்டும் என ரசிகர்கள் பலத்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.