விஜய் எப்போ அரசியலுக்கு வருகிறார் - ஷோபா சந்திரசேகர் பளீச்!
நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து அவரது தாய் தகவல் தெரிவித்துள்ளார்.
அரசியல் பயணம்
இயக்குநர் வம்சி இயக்கத்தில், விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தை பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இந்நிலையில், நடிகர் விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகர் காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தந்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், அனைவரையும் போல் நானும் சாமி கும்பிட வந்துள்ளேன். விஜய் படம் வெற்றி அடைய வேண்டும் என வேண்டிக் கொண்டுள்ளேன். என்னை போல் அனைவரும் வேண்டிக் கொள்ளுங்கள்.
அவருடைய முடிவுதான்..
விஜய்யின் வாரிசு படம் குறித்தும் அவரது அடுத்த படம் குறித்தும் எனக்கு எதுவும் தெரியாது. நானும் ரசிகர்களை போல் ஆவலாக உள்ளேன். படம் வந்தவுடன் அனைவரும் தியேட்டரில் போய் பார்க்க வேண்டும். விஜய் அரசியலுக்கு எப்போது வருவார் என கேட்கிறீர்கள்.
அதை நான் சொல்ல முடியாது. அது எல்லாமே அவருடைய முடிவுதான். நானும் அவரது தந்தை எஸ்ஏசியும் எந்த விஷயத்துலையும் தலையிடுவதில்லை என தெரிவித்துள்ளார்.