குழந்தையில் விஜய்யை நான்தான் குளிப்பாட்டுவேன்; இப்போ பார்த்தே ரொம்ப நாளாகுது - விஜய்யின் சித்தி பேட்டி!
நடிகர் விஜய்யின் சொந்த சித்தியான நடிகை ஷீலா அவரை குறித்து பேசியுள்ளார்.
நடிகர் விஜய்
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் கடந்த 19ம் தேதி வெளியானது. படம் வெளியானதிலிருந்து ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆனால் வசூல் ரீதியாக படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
வெளியான முதல் வாரத்தில் உலக அளவில் ரூ.461 கோடிக்கும் மேல் வசூலை குவித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தமிழ் சினிமா வரலாற்றில், முதல் வாரத்தில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை ‘லியோ’ படைத்துள்ளது.
இதனை தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத "தளபதி 68" படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது.
சித்தி பேட்டி
இந்நிலையில் விஜய்யை பார்க்க முடியவில்லை என்று அவருடைய சொந்த சித்தி ஷீலா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். ஷீலா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மூர்த்தியின் அம்மாவாக நடித்திருந்தார். அதுபோல இப்போது பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவின் அம்மாவாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் நடிகர் விக்ராந்தின் அம்மாவும் இவர்தான். ஷீலா பேசியதாவது "விஜய் பிறக்கும்போது நான் பத்தாவது படித்துக்கொண்டிருந்தேன். அவர் பிறந்த குழந்தையா இருக்கும்போது அம்மா, அக்கா எல்லாம் பயப்படுவாங்க குளிப்பாட்ட.
நான்தான் விஜய்யை குளிப்பாட்டுவேன். இப்போது அவரை பார்த்து ரொம்ப நாளாகுது, அவருடன் பேச முடியவில்லை. விஜய்யை நான் ரொம்ப மிஸ் பண்றேன். ஆனால் இப்போது அவர் பெரிய உயரத்தில் இருக்கிறார். அது சந்தோஷமாக இருக்கிறது" என்று ஷீலா பேசியுள்ளார்.