Monday, May 19, 2025

'லியோ' வெற்றி விழாவை தொடர்ந்து உடல்நலக்குறைவு - மருத்துவமனையில் நடிகர் விஜய்!

Vijay Tamil nadu Thalapathy Vijay Makkal Iyakkham
By Jiyath 2 years ago
Report

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார் நடிகர் விஜய் .

உடல்நலக் குறைவு

'லியோ' திரைப்படத்தின் வெற்றி விழா அண்மையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து முடிந்தது. இதில் நடிகர் விஜய் மற்றும் நடிகர்கள் அர்ஜுன், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், நடிகைகள் திரிஷா, மடோனா செபாஸ்டியன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் லலித்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் நடிகர் விஜய் அரசியல் குறித்து சூசகமாக பேசிய சில விஷயங்கள் தற்போது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் விஜய் சினிமாவை கடந்து விரைவில் அரசியலில் கால் பதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பல்வேறு முன்னெடுப்பு வேலைகளையும் விஜய்யின் "விஜய் மக்கள் இயக்கம்" சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

விஜய் சார் அஜித் சார்.. ஒரு அரசியல் கதை சொன்னேன்; அதற்கு அவர் சொன்னது..பிரபல இயக்குநர் பேட்டி!

விஜய் சார் அஜித் சார்.. ஒரு அரசியல் கதை சொன்னேன்; அதற்கு அவர் சொன்னது..பிரபல இயக்குநர் பேட்டி!

நேரில் சென்ற விஜய்

இதற்கான அனைத்து வேலைகளையும் முன்னிலையில் நின்று செயல்படுத்தி வருவது விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தான். இந்நிலையில் லியோ வெற்றி விழா நிகழ்ச்சியை தொடர்ந்து ஏற்பட்ட அதிக சோர்வு காரணமாக புஸ்ஸி ஆனந்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியை அறிந்ததும், உடனடியாக நடிகர் விஜய் மருத்துவமனைக்கு நேரில் சென்று, புஸ்ஸி ஆனந்தின் உடல்நலம் குறித்து விசாரித்தார். மேலும், புஸ்ஸி ஆனந்த் நடமுடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.