பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களை சந்திக்கப்போகும் விஜய் - அரசியலுக்கு அடிக்கல் நாட்டுகிறாரா?
தமிழகத்தில், பொது தேர்வுகளில் சாதனை பெற்ற மாணவர்களை நடிகர் விஜய் நேரில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில், டாப் நடிகராக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய். தற்பொழுது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாரிக்கும் லியோ எனும் படத்தில் நடித்து வருகிறார்.
இது பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வருகிறது, ஆகையால் இந்த படம் ஹிட் குடுக்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கம் மக்களுக்கு தேவையான உதவிகள் செய்து வருகிறது, மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கியும் பல உதவிகளை செய்து வருகிறது.
மாணவர்களுடன் சந்திப்பு
இந்நிலையில், தமிழக பொது தேர்வில் சாதனை பெற்ற மாணவர்களை நேரில் சென்று சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளது, விரைவில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான பிறகு இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
இதற்கான விவரங்களைச் சேகரிக்க வேண்டுமென விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலார் புஸ்ஸி ஆனந்த், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், சமீபத்தில், ''விஜய் மக்கள் இயக்க'' நிர்வாகிகளை விஜய் சந்தித்து மாணவர்களுக்குப் பரிசு வழங்குதல் என்பது அரசியலில் ஈடுபடுவதற்கான அறிகுறி என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை ஆதாரமாக உலகை உலுக்கிய No fire zone தமிழில் (கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும்) IBC Tamil
