பிரபல நடிகைக்கு கார் பரிசளித்த விஜய்? மனைவிக்கு கூட தெரியுமாம்.!

Vijay Keerthy Suresh Tamil Cinema Gossip Today
By Sumathi Mar 15, 2023 06:30 PM GMT
Report

நடிகர் விஜய், கீர்த்தி சுரேஸுக்கு கார் வாங்கி கொடுத்ததாக செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது.

கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் விக்ரம் பிரபு நடித்த ‘இது என்ன மாயம்’ திரைப்படத்தில் நடித்தார்.

பிரபல நடிகைக்கு கார் பரிசளித்த விஜய்? மனைவிக்கு கூட தெரியுமாம்.! | Actor Vijay Car Gifted To Keerthy Suresh

சமீபத்தில், ‘ராக்கி’ படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமான அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான ‘சாணி காயிதம்’ படம் வெளியானது. தற்போது ‘மாமன்னன்’, ‘தசரா’, ‘போலா ஷங்கர்’ உள்ளிட்ட படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

கார் பரிசு

இந்நிலையில் இவருக்கு விலைஉயர்ந்த கார் ஒன்றை நடிகர் விஜய் பரிசாக கொடுத்துள்ளாராம். இந்த விஷயம் விஜய்யின் மனைவி சங்கீதாவிற்கும் தெரியும் என பிரபல திரைப்பட விமர்சகரும், சென்னார் குழுவை சேர்ந்தவருமான உமைர் சந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

ஆனால், இந்த தகவலின் உண்மைத்தன்மை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகாதது குறிப்பிடத்தக்கது.