எனக்கு இருக்குற ஒரே கெட்ட பழக்கம் அதுதான் - மனம் திறந்த நடிகர் விஜய்!
தனக்கு இரு கெட்டப்பழக்கம் இருப்பதாக விஜய் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் விஜய். தற்போது இவர் நடிப்பில் வெளியான் லியோ திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்று வருகிறது.

அதனைத் தொடர்ந்து, தளபதி68 படத்தின் பூஜை வீடியோ வெளியானது. இந்த படத்தை வெங்கட்பிரபு இயக்கி வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
வைரல் வீடியோ
இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, மீனாக்ஷி சவுத்ரி, அஜ்மல் என பலரும் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இந்தத் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.

இதற்கிடையில், விஜய் தனது ரசிகர் மன்றத்தை கடந்த 2009ஆம் ஆண்டு விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி கொடியையும் அறிமுகப்படுத்தினார். அரசியல் தலைவர்களின் பிறந்த நாள், மாணவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்வு, உள்ளாட்சித் தேர்தலில் வென்றவர்களை அழைத்து பாராட்டு என பல பணிகளை செய்தனர்.
இதன்மூலம் அவர் அரசியலுக்கு வருவதற்கான பணிகளையும் தீவிரமாக செய்து வருவதாக எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் விஜய் குறித்து எந்த செய்திகள் வெளியானாலும் ஹாட் டாப்பிக்காக மாறிவிடுவது வழக்கம். பல கிசுகிசுவிலும் சிக்கினார்.
இந்நிலையில், விஜய் சில வருடங்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் எனக்கு இருக்கும் ஒரே கெட்ட பழக்கம், நான் முகத்தின் முன்னே சிரித்து விடுவேன். என்னால் சிரிப்பை அடக்க முடியாது என தெரிவித்திருந்தார். இதுகுறித்த வீடியோ வெளியாகி தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
கொழும்பில் பயங்கரம்: வீதியில் சுட்டுக் கொல்லப்பட்ட சட்டத்தரணி மற்றும் மனைவி - களத்தில் குதிக்கும் CID IBC Tamil
24 வயதில் பான் இந்தியா ஸ்டார்! மருத்துவர் பட்டம் பெற்ற நடிகை ஸ்ரீலீலா.. குவியும் வாழ்த்துக்கள் Manithan
பதவி பறிப்பு முதல் பழிவாங்கல் நடவடிக்கைகள் வரை...! அம்பலப்படுத்திய சிறீதரன்: வெளிவந்த உண்மைகள் IBC Tamil