விஜய்க்கு அது மட்டும் தான் ரொம்ப பிடிக்கும் - அம்மா ஷோபா
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் நடிகர் விஜய். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதில் இடம் பிடித்து தனக்கென்று அந்தஸ்த்தை பெற்றுள்ளார் நடிகர் விஜய்.
சமீபத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளியானது. இப்படம் வசூலில் மாபெரும் சாதனையை படைத்துள்ளது. பீஸ்ட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் 66 வது படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கி வருகிறார்.
தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனாவும், இசையமைப்பாளராக தமனும், முக்கிய கேரக்டர்களில் நடிகர்கள் சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், ஷாம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் விஜய் அம்மா ஷோபா பேசினார். அப்போது அவர் விஜய் குறித்த பல சுவாரஸ்ய தகவலை சொன்னார்.
அந்த பேட்டியில் விஜய் அம்மா பேசுகையில்,
விஜய்க்கு சைக்கிள் என்றால் ரொம்ப பிடிக்கும். எப்ப பார்த்தாலும் சைக்கிளில்தான் சுற்றிக்கொண்டே இருப்பார். வீட்டு வாசல்ல அத்தனை காரு இருக்கும். ஆனா.. விஜய் பள்ளிக்குகூட சைக்கிளில்தான் செல்வார். ஒருநாள் நான் மதிய உணவிற்கு விஜய் பள்ளிக்கு சென்றபோது, ஏன் அம்மா... நீங்க வெயிலில் மதிய வேளையில் வரீங்க... சொன்னா.. நானே சைக்கிளில் வந்திருருப்பேன்ல...ன்னு சொன்னாரு.
தேர்தலில் நடக்கும்போது ஓட்டுபோட சைக்கிளில் சென்றார் விஜய் என்று நாங்க டிவிய பார்த்துதான் தெரிந்து கொண்டோம். டிவியில் பார்த்ததும் அவருடைய அப்பா... பாத்தீய்ய... இப்போகூட விஜய் சைக்கிளில விடவே இல்லை என்று சொன்னாரு. அத பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருந்தது..
இவ்வாறு விஜய் அம்மா ஷோபா பேசினார்.