நடிகர் எஸ்.வி. சேகருக்கு 1 மாதம் சிறை - என்ன காரணம்?
நடிகர் எஸ்.வி.சேகருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நடிகர் எஸ்.வி.சேகர்
கடந்த 2018 ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர் ஒருவர் குறித்து தரக்குறைவாக பேஸ்புக்கில் எஸ்வி சேகர் பதிவு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சில ஆண்டுகளாக வழக்கு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
சிறை தண்டனை
அதில், எஸ் வி சேகர் குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிருபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த நீதிபதி ஜெயவேல், அவருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் மற்றும் 1 மாத சிறை தண்டனை விதிக்கப்படுவதாக தீர்ப்பளித்துள்ளார்.
இதனையடுத்து, உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்ய உள்ளதாக அவர் தெரிவித்ததை அடுத்து சிறை தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அபராத தொகையை செலுத்தியுள்ளார்.