பிறந்தநாள் கொண்டாட்டத்தில் உயிரிழந்த ரசிகர்கள் - குடும்பத்தினருக்கு நடிகர் சூர்யா ஆறுதல்!
நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் உயிரிழந்த ரசிகர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
சூர்யா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் பல படங்களில் நடித்துள்ளார், இவரது நடிப்பின் திறமையால் பல ரசிகர்களை கவர்ந்து தற்பொழுது டாப் நடிகராக உள்ளார். இவர் நேற்று தனது 48வது பிறந்தநாளை கொண்டாடினார்.
அதனை முன்னிட்டு அவரது கங்குவா படத்தில் இருந்து க்ளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது. மேலும், சூர்யாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. இன்னொரு பக்கம் சூர்யாவின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் விமர்சையாக கொண்டாடினர்.
உயிரிழப்பு
இந்நிலையில், ஆந்திர மாநிலம் நரசராவ்பேட்டையில் சூர்யாவின் பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாடினர். அப்பொழுது இவருக்கு பேனர் வைக்கும்போது மின்சாரம் தாக்கி 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Thank you very much @Suriya_offl Garu for responding and being with the family ??
— Nellore NTR Fans (@NelloreNTRfc) July 23, 2023
We @tarak9999 Fans always with you ?#HappyBirthdaySuriya pic.twitter.com/w61XsSxQWS
இதில் இறந்த ரசிகர்களின் குடும்பத்திற்கு வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு சூர்யா ஆறுதல் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்து தருவதாகவும் உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது.