ஷூட்டிங்கில் ஏற்பட்ட விபத்து - நடிகர் சூர்யாவிற்கு ஏற்பட்ட காயம் - அதிர்ச்சி தகவல்
நடிகர் சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ்ஜின் தனது 44-வது படத்தில் நடித்து வருகிறார்.
சூர்யா - கார்த்திக் சுப்புராஜ்
கங்குவா படத்தின் முடித்துள்ள சூர்யா தற்போது, கார்த்திக் சுப்புராஜுடன் இணைந்துள்ளார். ஜிகர்தண்டா 2 படத்தின் வெற்றிக்கு பிறகு அவர் சூர்யாவுடன் அவர்கைகோர்த்துள்ளார். நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் முன்னோட்டம் வெளிவந்து ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.
சூர்யா 44 என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடைபெற்று வருகிறது. பூஜா ஹேக்டே நாயகியாக நடித்து வரும் இப்படத்தின் ஷூட்டிங் ஊட்டியில் நடைபெற்று வருகிறது.
விபத்து
இந்த ஷூட்டிங்கில் நடிகர் சூர்யாவும் பங்கேற்றுள்ளார். அப்போது திடீரென அவருக்கு தலையில் சிறு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
தலையில் ஏற்பட்டுள்ள சூர்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் பூரண நலத்துடன் வீடு திரும்பி உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
ஆனால், சூர்யா சில காலம் ஓய்வெடுக்க வேண்டும் என்று அவருக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.