திடீரென உடல் எடையை அதிகரித்த நடிகர் சூர்யா - புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்..!

Suriya Jyothika Tamil Cinema
By Thahir May 10, 2023 12:10 PM GMT
Report

நடிகர் சூர்யா திடீரென உடல் எடையை அதிகரித்த புகைப்படம் ஒன்று வெளியான நிலையில் அதைப்பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உடல் எடையை அதிகரித்த நடிகர் சூர்யா 

ஞானவேல் ராஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிகர் சூர்யா நடிக்க உள்ளார். இப்படத்திற்கு கங்குவா எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பட்டானி நடிக்கிறார்.

Actor Suriya suddenly gained weight

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கொடைக்கானலில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பில் நடிகர் சூர்யா, ஜோதிக்காவுடன் சண்டை பயிற்சியாளர் சுப்ரீம் சுந்தர் குடும்பத்தினர் புகைப்படம் ஒன்று எடுத்துக் கொண்டனர்.

அந்த புகைப்படத்தில் சூர்யா தாடியுடன் உடல் எடையை அதிகரித்த தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகிறது.