தமிழ்நாடு பாஜகவை நிராகரித்தாலும்..நான் தான் எம்பியாவேன் - நடிகர் சுரேஷ் கோபி உறுதி!
தமிழ்நாட்டுக்கு பாஜகவுக்கு நான் தான் எம்பி என நடிகர் சுரேஷ் கோபி கூறியுள்ளார்.
சுரேஷ் கோபி
நடப்பாண்டின் மக்காவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. அதன் முடுவுகள் கடந்த ஜூன்4ம் தேதி வெளியானது அதில், தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றது.அதிலும், பா.ஜ.க தனிப்பெரும்பான்மைக்கான இடங்களை தொடாமல் 240 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. இந்தியா கூட்டணி 230 இடங்களை கைபற்றியது.
அந்த வகையில், பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி, தமிழில் தீனா, ஐ, தமிழரசன் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். கேரளா, திருச்சூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட இவர், 4,12,338 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.இதன் மூலம் கேரளாவில் பாஜக காலூன்றியுள்ளது.
தேர்தல் வெற்றிக்குப் பிறகு திருச்சூருக்கு சென்ற சுரேஷ் கோபிக்கு பாஜக சார்பில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. கேரளாவின் முதல் பாஜக எம்பியான சுரேஷ் கோபிக்கு மத்திய அமைச்சர் பதவி உறுதியாகவே கிடைக்கும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த நிலையில் நடிகர் சுரேஷ் கோபி எம்பி நேற்று டெல்லி சென்றார்.
தமிழ்நாடு எம்பி
அதற்கு முன்னதாக திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கேரளாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் ஒரே பாஜக எம்பி நீங்கள்தானே என எழுப்பப்பட்ட கேள்விக்கு, நான் திருச்சூர் எம்பி என்பதால் திருச்சூர் தொகுதிக்கு மட்டுமே செயல்படுவேன் என்பது அர்த்தம் அல்ல.
நான் கேரளாவுக்கும் தமிழ்நாட்டுக்குமான பாஜக எம்பியாக செயல்படுவேன். தமிழ்நாட்டுக்கான விவகாரங்களை கவனிக்கக் கூடிய எம்பியாகவும் இருப்பேன். இதனை லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போதே தெரிவித்தேன். இதனை ஏற்றுதான் மக்கள் எனக்கு வாக்களித்துள்ளனர்.
ஆகையால் தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்குமான எம்பியாக செயல்படுவேன் என்றார். மேலும், தமிழ்நாட்டில் பாஜக தனிக் கூட்டணியை அமைத்துப் போட்டியிட்டது. ஆனால் ஒரு இடத்தில் கூட தமிழ்நாட்டில் பாஜக வெல்லவில்லை. தமிழ்நாட்டு மக்கள் பாஜகவை நிராகரித்துவிட்டனர். ஆனாலும் பாஜகவின் தமிழ்நாட்டு எம்பியும் நானே என நடிகர் சுரேஷ் கோபி கூறியது சர்ச்சையாகிவிட்டது.