கோலிவுட்டின் அடுத்த சென்சேஷனா!! நடிகை ஸ்ரீகாந்தின் மகளா இது?

Karthick
in பிரபலங்கள்Report this article
நடிகரின் ஸ்ரீகாந்தின் குடும்ப புகைப்படம் அண்மையில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
ஸ்ரீகாந்த்
மாடலாக பிரபலமாக இருந்த ஸ்ரீகாந்த், பெரும் போராட்டங்களுக்கு பிறகு 2002 ஆம் ஆண்டு ரோஜா கூட்டம் படத்தில் நாயகனாக அறிமுகமாகினார்.
முதல் படம் பெரும் வெற்றி. அதனை தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில், பார்த்திபன் கனவு, மனசெல்லாம், கனா கண்டேன், பம்பர கண்ணாலே என பல படங்களில் நாயகனாக நடித்தார். சிறிது காலத்தில் மார்க்கெட் சரிய, துணை கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார் ஸ்ரீகாந்த்.
தெலுங்கு மொழி படங்களிலும் அறிமுகமான இவர், அங்கும் பிஸியான துணை நடிகராக மாறினார். நீண்ட இடைவேளைக்கு பிறகு சங்கரின் இயக்கத்தில் விஜயுடன் 3 நாயகர்களில் ஒருவராக "நண்பன்" படத்திலும் நடித்திருந்தார்.
மலையாளத்திலும் ஓரிரு படங்களில் நடித்துள்ள ஸ்ரீகாந்த், தற்போது ஹீரோ, துணை நடிகர் என பிஸியாக இருக்கும் இவர், 2008-ஆம் ஆண்டு வந்தனா என்பவரை திருமணமும் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள்.
திரைத்துறையில் கவனம் பெற்ற நடிகராக இருக்கும் போதிலும் ஸ்ரீகாந்தின் குடும்ப விஷயங்கள் பெரிதாக மீடியா கண்களில் படுவதில்லை. ஆனால, அண்மையில் இவர் தனது குடும்பத்தினருடன் எடுத்து கொண்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது.
மகன், மகள் மற்றும் மனைவி வந்தனாவுடன் அப்படத்தில் உள்ளார் ஸ்ரீகாந்த். குறிப்பாக ஸ்ரீகாந்தின் மகளை கண்ட பலரும் தமிழ் சினிமாவிற்கு அடுத்த நாயகி தயார் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

பாகிஸ்தான் விமான நிலையம் அருகே குண்டு வெடிப்புகள்..! சிறிலங்கா எயார்லைன்ஸின் அவசர அறிவிப்பு IBC Tamil
