என்னோட பணத்தை சுருட்டிட்டாங்க - பொண்ணுக்கு நான் செஞ்சது - மேடையில் ராஜ்கிரண் வேதனை!!
நடிகர் ராஜ்கிரண் தமிழ் சினிமாவில் தனி அடையாளம் கொண்டவராக திகழ்கிறார். விநியோகஸ்தராக, பட தயாரிப்பாளராக, நடிகராக, இயக்குனராக பல பரிணாமங்களில் அழுத்தமான தடத்தை பதித்துள்ளார் ராஜ்கிரண்.

நடிகர் சில படங்கள் மட்டுமே ராஜ்கிரண் நடித்திருந்தாலும், அவரின் படங்கள் பலதும் பெரும் வெற்றி பெற்ற படங்களே. சிறிய இடைவேளைக்கு பிறகு நாயகனாக இல்லாமல், துணை கதாபாத்திரத்தில் அவர் நடிக்க துவங்கியதும் மீண்டும் வெற்றி பெற்றார் ராஜ்கிரண்.

இவரின் வளர்ப்பு மகளான பிரியா சீரியல் நடிகர் முனீஸ் ராஜாவை திருமணம் செய்த பிறகு ஏற்பட்ட கசப்பான சம்பவங்கள் அறிந்தவையே. பிரியா முனீஸ் ராஜாவை பிரிந்து தந்தை ராஜ்கிரணிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றும் வெளியிட்டார்.
இந்த சம்பவங்களுக்கு பிறகு தற்போது ராஜ்கிரண், அவரது மனைவி கதீஜா மற்றும் மகள் பிரியா இணைத்து தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர். அதில் பேசும் போது, ராஜ்கிரண் முதல் ஒரு கோடி ரூபாய் சம்பளம் பெற்ற நடிகராக இருந்த போது, தன்னுடன் இருந்த சிலர் தனது பணத்தை சுருட்டி விட்டு சென்றதாக சிரிப்புடன் கூறிய அவர், அப்போது தான் மனைவியை திருமணம் செய்து கொண்டதாகவும் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

மேலும் நிகழ்ச்சியில் பேசிய ராஜ்கிரண், மகளுக்கு தான் வெளி உலகத்தை காட்டாமல் வளர்த்து விட்டதாக தெரிவித்து, வீட்டுக்குள்ளேயே வளர்ந்து விட்டேன் என்றும் கூறிய ராஜ்கிரண் அதனால் தான் அவளுக்கு உலகம் தெரியவில்லை என்றார்.
அறியாமையால் தவறு நடந்துவிட்டதாக தெரிவித்த ராஜ்கிரண், இப்போது என் பொண்ணு பாடம் படிச்சிட்டு திரும்பி வந்துவிட்டால் என்றார்.
உயர்கல்வி வாய்ப்புகளை தவறவிட்ட மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்! அரசாங்கத்தின் புதிய திட்டம் IBC Tamil
நாமலுக்காக முந்திக்கொண்டு வந்த அர்ச்சுனா! பைத்தியம் என பதில் வழங்கிய மகிந்த ஜெயசிங்கவால் சபையில் வாக்குவாதம் IBC Tamil