மதுரையில் அதிரும் களம் - திமுகவிற்கு ஆதரவாக பரப்புரை செய்ய போகும் சூரி..?

Udhayanidhi Stalin DMK Madurai Soori
By Karthick Mar 25, 2024 04:19 AM GMT
Report

நடைபெறவுள்ள மக்களவை தேர்தல் பிரச்சாரம் களம் சூடுபிடித்துள்ளது.

மக்களவை தேர்தல்

இன்னும் ஒரு மாத கால இடைவேளை கூட இல்லாத நிலையில் தமிழகத்தில் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக கூட்டணி - அதிமுக கூட்டணி - பாஜக கூட்டணி - நாம் தமிழர் என 4 முனை போட்டி தமிழ்கத்தில் நிலவுகிறது.

actor-soori-to-campaign-for-dmk-in-elections

அனைத்து கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அமைச்சரவையை சேர்ந்த அனைவருமே ஆளும் திமுகவிற்கு ஆதரவாக வாக்குகளை சேகரித்த வண்ணம் உள்ளனர்.

actor-soori-to-campaign-for-dmk-in-elections

திரை பிரபலங்களும் ஆங்காங்கே பரப்புரையில் ஈடுபடப்போவதாக கூறப்படும் நிலையில், திமுகவிற்கு ஆதரவாக நடிகர் சூரி பிரச்சாரம் செய்யவுள்ளார் என்ற செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

திமுகவை விமர்சித்து ரிமோட்டால் டிவியை உடைத்தது இதனால்தான் - கமல்ஹாசன் விளக்கம்!

திமுகவை விமர்சித்து ரிமோட்டால் டிவியை உடைத்தது இதனால்தான் - கமல்ஹாசன் விளக்கம்!

சூரி பிரச்சாரம் செய்கிறாரா..?

திமுகவின் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோருடன் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் நீடோகும் அவர் பரப்புரை மேற்கொள்வர் என்ற கருத்துக்கள் அதிகரித்த நிலையில், அது குறித்து சூரியே விளக்கமளித்துள்ளார்.

actor-soori-to-campaign-for-dmk-in-elections

மதுரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூட்டணி கட்சி வேட்பாளரான சு. வெங்கடேசனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், அவரை நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் சூரி.

actor-soori-to-campaign-for-dmk-in-elections

அதனை தொடர்ந்தே இந்த கேள்விகள் அதிகரித்த நிலையில், செய்தியாளரிடம் பேசிய சூரி, தான் தற்பொழுது படங்களில் பிஸியாக நடித்து வருவதாக குறிப்பிட்டு அது அமைச்சர் உதயநிதிக்கு தெரியும் என்றும், ஆகையால் அவர் தன்னை அழைக்கவில்லை என தெரிவித்தார்.